வட கிழக்கு பருவ மழையால் மதுரை மாவட்டத்தில் 10 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் வணிக வரித்துறை
அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றோர்கள், ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் “மதுரை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை குறைவாக கிடைத்துள்ளது, கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் வட கிழக்கு பருவ மழை 157.98 மில்லி மீட்டர் குறைவாக கிடைத்துள்ளது, மதுரை மாவட்டத்தில் மழையால் 27 இடங்கள் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, வைகையாற்றின் கரையோரங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1,322 நீர் நிலைகளில் 555 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, 336 நீர் நிலைகள் 75 சதவீதமும், 157 நீர் நிலைகள் 50 சதவீதமும், 143 நீர் நிலைகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது, வட கிழக்கு பருவ மழைக்கு 6 பேர் உயிரிழந்தனர், வடக்கு பருவ மழையால் 183 வீடுகள் சேதமடைந்தன, மதுரை மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, மதுரை மாவட்டத்தில் 179 கட்டிடங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது, கரை உடைப்புக்களை தடுக்க 25,730 மணல் மூட்டைகள் தயாராக உள்ளது, மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு 641 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர், டெங்கு தடுப்பு பணியில் 1,037 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்” என பேசினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில் “வட கிழக்கு பருவ மழையால் மதுரை மாவட்டத்தில் 10 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு, மழை குறைவாக பெய்து உள்ளதால் பாதிப்புகள் ஏற்படவில்லை, வைகையாற்றில் தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, வைகையாற்றில் உள்ள செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன, வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர், அதன் அடிப்படையில் நாளை காலை 8 மணிக்கு வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உள்ளோம், வினாடிக்கு 150 கன அடி வீதம் உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *