Contact Us About Us
  • தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை
  • நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
  • நீட் தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
  • பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
  • மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது -நடிகை குஷ்பு டுவீட்
  • புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்
Flash News

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய படைகள்

சீனாவுடனான எல்லை பதற்றம் ஒருபுறம் இருக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மறுபுறம் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி அத்துமீறிய தாக்குதல், பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.


இதற்காக பாகிஸ்தானின் ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவை திட்டம் தீட்டி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக இந்திய எல்லை பகுதி வழியே ஆயுதங்களை கடத்துவதும், ஆளில்லா விமானங்கள் வழியே வானில் இருந்து ஆயுதங்களை கீழே போடுவதும் போன்ற செயல்களும் நடந்து வருகின்றன.

இதனை காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.  பல முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தும் உள்ளது.  இந்த நிலையில், இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இருந்து ஆயுதங்களை கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.

காஷ்மீரின் தங்தார் பிரிவில் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் இந்த முயற்சியை முறியடித்து உள்ளது.  இதில், 5 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada