Contact Us About Us
  • தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை
  • நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
  • நீட் தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
  • பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
  • மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது -நடிகை குஷ்பு டுவீட்
  • புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்
Flash News

‘800’ திரைப்பட விவகாரம்: விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரிரு நாளில் ஆலோசித்து தனது முடிவை விஜய்சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,  800 படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார்.  ‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada