Contact Us About Us
  • ஜெ., பணிப்பெண்கள் 3 பேர் விசாரணை கமிஷன் முன் ஆஜர்
  • டிச., 17 ல் புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்
  • சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு
  • திமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி
  • எதிர்க்கட்சிகள் அமளி : ராஜ்யசபா டிச.,17 வரை ஒத்திவைப்பு
  • ஆஸி., அணிக்கு சச்சின் பாராட்டு
  • மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது
  • மேட்டூர் அணையில் நீர்திறப்பு 12,500 கனஅடியாக அதிகரிப்பு
  • தினமலர் இணையதளத்தில், 'துப்பாக்கி முனை' படம் விமர்சனம்
  • பார்லி., இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
Flash News

அபிஜித் போஸ் வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம்

வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது

 

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada