Contact Us About Us
  • மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமோக வெற்றி
  • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
  • பாஜகவின் மகத்தான வெற்றி - அமித் ஷா, மோடிக்கு அத்வானி வாழ்த்து
  • இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
  • பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: தொண்டர்களை சந்தித்தார் மோடி
  • ரேபலேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி
  • கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்
  • ஆரணி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் vishnuprasad அவர்கள் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி
  • இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
  • நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
Flash News

முகே‌ஷ் அம்பானி ரூ.1 கோடியே 11 லட்சம் திருப்பதி கோவிலில் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ்அம்பானி ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார். 

 

திருமலை :

ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானியின் மகள் ஈ‌ஷாஅம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக, அந்தத் திருமண அழைப்பிதழை எடுத்து வந்து, திருப்பதி ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, சிறப்புப்பூஜை செய்வதற்காக, ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன முதன்மை இயக்குனர் பி.எம்.பிரசாத், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் மாதவராவ் ஆகியோர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை கோவிலில் நடந்த அர்ச்சனை சேவையில் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மகளின் திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து வழங்கினர்.

கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் முகே‌ஷ் அம்பானிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம், டைரி, காலண்டர் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பின்னர் தங்க விமான கோபுரத்தை வலம் வந்த முகே‌ஷ் அம்பானி, அங்குள்ள பிரதான உண்டியலில் ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார்

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada