Contact Us About Us
  • ஜெ., பணிப்பெண்கள் 3 பேர் விசாரணை கமிஷன் முன் ஆஜர்
  • டிச., 17 ல் புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்
  • சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு
  • திமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி
  • எதிர்க்கட்சிகள் அமளி : ராஜ்யசபா டிச.,17 வரை ஒத்திவைப்பு
  • ஆஸி., அணிக்கு சச்சின் பாராட்டு
  • மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது
  • மேட்டூர் அணையில் நீர்திறப்பு 12,500 கனஅடியாக அதிகரிப்பு
  • தினமலர் இணையதளத்தில், 'துப்பாக்கி முனை' படம் விமர்சனம்
  • பார்லி., இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
Flash News

லித்தியம் அயனங்களுடன் முதல் பேட்டரி பைக்

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

 

 

ஹஷிகோ க்ரீன் வீல் எனும் நிறுவனம் லித்தியம் பேட்டரியின் மூலம் இயங்கும் புதிய வகை நவீன இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.ஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட  இந்த புதிய வகை இருசக்கர வாகனம் அறிமுக நிகழ்ச்சி கோவையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.முன்னதாக வாகனத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நிறுவன செயல் அதிகாரி,மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்தப்பட்டிருந்தாலும் அவை பல்வேறு தொழில்நுட்ப பிரச்சிணைகளால் மக்கல் மத்தியில் முழுமையாக சென்று சேர்வில்லை என்றும் அத்ற்கான புதிய முயற்சியாக அதிக மைலேஜ் தரும் வகையில் மாற்றத்தக்க லித்தியம் பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.ஒரு மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் எனவும் அனேக இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்யவும் பேட்டரிகளை விற்பனை செய்யவும் மையங்கள் விரைவில் துவங்கப்படும் எனவ்உம் தெரிவித்தார்.மேலும் அதிக வெப்பமடையாத வகையிலும் பாதுகாப்பான முறையிலும் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலேயே செலவீனம் இருக்கும் எனவும் கூறியதுடன் ஆரம்ப விலையாக 39 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று வகை வாகனங்கள் தற்ப்பொது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada