Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி மாயை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆவேசம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டு எங்களுக்கானது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி மாயை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார்.

மும்பையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும். 2019-ம் ஆண்டு எங்களுடையது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன்இ சிவசேனா சேர்ந்தே போட்டியிடும் என்று உறுதி கூறுகிறேன். அதற்கான பேச்சு நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் உண்மையான தோற்றம் வித்தியாசமானது. அந்தக் கூட்டணி நிலையாக இருக்காது. அது ‘மாயை’ கூட்டணி. கடந்த 2014-ம் ஆண்டு அனைவருக்கும் எதிராக நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்றுஇ ஆட்சியைப் பிடித்துள்ளோம். எதிர்க்கட்சியின் மகா கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் மாநிலத் தலைவர்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடியாது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேற்கு வங்கம்இ வடகிழக்கு மாநிலம், ஒடிசா மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆட்சி குறித்துதான் மக்களவைத் தேர்தலில் பேசப்படும். ஆனால்இ நாங்களோ கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை உயர்த்திஇ உறுதி செய்திருக்கிறோம், ஊழலைத் தோற்கடித்து இருக்கிறோம். 8 கோடி மக்களுக்கு புதிய கழிப்பிடங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம், 2.50 கோடி மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.

இந்த தேசத்துக்கு வலிமையான அரசு அமைவது அவசியம். இது பாஜகவின் விருப்பம் மட்டுமல்லஇ மக்களும் அப்படித்தான் விரும்புகிறார்கள்.

ராஜஸ்தான்இ மத்தியப் பிரதேசம்இ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவானது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அதே முடிவுகள் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. அதை தொடர்புப்படுத்துவதும் சரியல்ல. மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை மக்களவைத் தேர்தலோடு தொடர்புபடுத்த முடியாது. இரு வகையான தேர்தலும் முற்றிலும் வித்தியாசமானவை.

மக்களுக்காகப் பணியாற்றிஇ அவர்களைத் திருப்திப்படுத்துவது எங்கள் பணியாகும். ஆனால்இ மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும்கூட அதையும் ஏற்றுக்கொள்கிறோம். நான் எந்த விதமான தேர்தல் முடிவு ஆய்வுகளுக்கும் விரோதியல்ல. ஆனால்இ தேர்தல் என்பது பல்வேறு முக்கிய விஷயங்கள் அடிப்படையில்இ தேவைகள் அடிப்படையில் நடப்பவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும்இ ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்இ விஷயங்கள்இ தேவைகள் இருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. தற்போது 16 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. ஆதலால்இ 2019-ம் ஆண்டு எந்தக் கட்சி வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் முடிந்த தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து பாஜக சுய பரிசோதனை செய்யும்''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada