Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

இந்தியருக்கு பேஸ்புக் நிறுவனத்தில் உயர் பதவி

 

பேஸ்புக் நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அதிகாரியாக உள்ளவர் கரன்தீப் ஆனந்த் இந்தியர். இவர் 15 ஆண்டுகள் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் சேர்ந்தவர் ஆவார். இவர் பேஸ்புக் நிறுவனத்தில் மார்க்கெட் பிளேஸ், ஆடியன்ஸ் நெட்வொர்க், ஆட் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியவர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாப்ட்வேர் என்னும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தரவு (டேட்டா) என்ஜினீயர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை வகிப்பார். ‘வொர்க் பிளேஸ்’ தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கரன் தீப் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “உலகமெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வொர்க்பிளேஸ்சை கொண்டு செல்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப்போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி உள்ளார்.

கரன்தீப் ஆனந்த் வொர்க்பிளேஸ் பிரிவில் தலைமை ஏற்பது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில் கரன்தீப் வொர்க்பிளேஸ் தலைமை பதவிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பின்னணியில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பவர். அவர் எங்களுடன் சேர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என குறிப்பிட்டார்

 

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada