Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்வின் கீழ் மாணவிகள் தங்களது கனவு குறித்து பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்வு நடைபெற்றது-மாவட்டம் முழுவதிலும் 2,508 பள்ளிகளை சேர்ந்த 1,94,940 மாணவிகள் பங்கேற்று தங்களது கனவு குறித்து பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,508 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்வான என் கனவு என்ற தலைப்பின் கீழ் தங்களது கனவுகளை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அஞ்சல் அட்டையில் தங்களது கனவுகளை பெண் குழந்தைகள் எழுதி பெற்றோர்களுக்கு அனுப்பும் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய இந்த சாதனை நிகழ்வில் 5,600 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை தீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார், அஞ்சல் துறை கோட்;;ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண் பிள்ளைகளின் கல்வி மற்றும் பெண் பிள்ளைககைளின் பாதுகாப்பு குறித்தும், பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி தர வேண்டிய பாதுகாப்பு, கல்வி மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய சம வாய்ப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்த பெண் பிள்ளைகளை காப்போம், பெண் பிள்ளைகளுக்கு கற்பிப்போம் என்ற என் கனவு சாதனை நிகழ்வு நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் உள்ள 2,508 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில் 5,600 மாணவிகள் பங்கேற்று தங்களது கனவுகள் குறித்தும், தங்களது கல்விக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியது குறித்தும் தங்களது பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அங்கு வைக்கபட்டிருந்த அஞ்சல் பெட்டியில் தபால் துறை ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் மாணவிகள் தங்களது என்னங்களை தபால் அட்டையில் எழுதும் பழக்கத்தினை ஊக்கம்படுத்தும் விதமாகவும் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று சிறந்த கடிதத்தை எழுதிய தலா 5 பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டு வார்த்திற்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஆகியோருடன் இணைந்து ஒரு நாள் பணிகளில் உடன் பங்கேற்று பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்;று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 
 

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada