Contact Us About Us
  • தஞ்சாவூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஸ்டிரைக்
  • இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்
  • மெரினாவில் ஜெ., நினைவிடத்திற்கு தடையில்லை
  • அக்., முதல் சென்னை - ஜப்பானுக்கு நேரடி விமான சேவை
  • முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு இலக்கு 158 ரன்கள்
  • . பிப்.,11ம் தேதி சவுந்தர்யா ரஜினி 2வது திருமணம்
  • . திருமழிசை ஜெகநாதர் கோவில் தேரோட்டம்
  • புதுக்கோட்டையில் வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்
  • லோக்சபா தேர்தல்: அதிமுக குழு அமைப்பு
  • மஹாராஷ்டிராவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேர் கைது
Flash News

 மகாபோதி பௌவுத்த சங்கம் சார்பில்  புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உரிய அனுமதியின்றி  மகாபோதி பௌவுத்த சங்கம் சார்பில்  புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிர்வாகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அவர்கள் வழிப்பாடு செய்வதற்கு ஏதுவாக  பெருமாள்இ பிள்ளையார்இ ஆதிபராசக்திஇ மசூதிஇ தேவாலயம்இ உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் உள்ளது.  இந்நிலையில் பெல் நிறுவன வளாக குடியிருப்பகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புத்தத்தை தழுவி மகாபோதி பவுத்த சங்கம் ஆரம்பிக்கபட்டு வழிபாடு நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் தாங்கள் புத்த வழிபாடு நடத்த பெல் நிர்வாகத்திடம் இடம் கேட்டுள்ளனர். இதற்க பெல் நிர்வாகமோ அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அதிகாரிகள் அனுமதிக்கும் பட்சத்தில் கோவில் அமைத்து வழிபாடு நடத்தி கொள்ளுங்கள் என்றது. இந்நிலையில்
சென்னை அடுத்த  மஹாபலி புரத்தில் இருந்து கொண்டு வரபட்ட மூனரை அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை எடுத்து வந்து பெல் நிறுவன குடியிருப்பு பகுதியான பி செக்டர் பகுதியில் நேற்று இரவு கொண்டு வந்து வைத்து இன்று காலை புத்தர் சிலைக்கு பூஜை செய்தனர். 
இதையறிந்த பெல் நிறுவன பாதுகாகாவலர்கள் பெல் போலீசாரிடம் புத்தர் சிலை வைப்பதற்கு அனுமதி வாங்காமல் புத்தர் சிலை வைத்து வழிப்பாடு செய்வதாக புகார் செய்தனர். அதன் அடிப்படையில் பெல் போலீசார் சங்க நிர்வாகிகளை அழைத்து புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை  அனுமதியில்லாமல் வைத்து வழிப்பாடு செய்ய மாட்டோம் என்று பெல் போலீசார் எழுதி கேட்டுள்ளனர். 
இதனால் அப்பகுதியில் பரப்பாரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் சங்க நிர்வாகியான தேவந்திரன் புத்தர் சிலை வைப்பது சம்மந்தமாக பெல் நிறுவனத்திடம் மனு அளித்தாக கூறப்படுகிறது.  இந்த இடமானது  துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட இடம். இதனால் துவாக்குடி நகராட்சியிடம் அனுமதி கேட்டு கடந்த 11ம் தேதி மனு அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். அதன் அடிப்படையில் தான் புத்தர் சிலை வைத்ததாக கூறினார். பெல் வளாகத்தில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்து வழிபாடு நடத்திய சம்பவம் 
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada