Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை-இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று 2019ம் ஆண்டு சிறப்பாக அமைய அருள்மிகு அண்ணாமலையாரை வேண்டி நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஆங்கில புத்தாண்டு 2019ம் ஆண்டு இன்று தொடங்குவதால் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நீண்ட வரிசையில் நின்று 2019ம் ஆண்டு சிறப்பாக அமையவும், அனைவரும் நலமுடன் வாழவும், நாடு செழிப்படையவும், நல்ல மழை பொழியவும் வேண்டி நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயிலின் கிழக்கு திசையில் உள்ள இராஜ கோபுரம், வடக்கு திசையில் உள்ள அம்மனி அம்மன் கோபுரம் ஆகிய கோபுரங்கள் வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறமம் இல்லாமல் உண்ணாமுலையம்மன் உடனாகிய அருணாமலையாரை வழிபட்டு சென்றனர்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada