Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி தமிழகத்தை வீழ்த்தியது

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada