Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சமூகவலைதளங்களின் வாயிலாக பெண்களிடம் நட்பாகப் பழகி சுமார் 200 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கொடூரம் தொடர்பாக, பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் இச்சம்பவத்தின் பின்னணியில் அதிமுகவின் மாணவரணியைச் சேர்ந்த பார் நாகராஜ் இருப்பதாக மாதர் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் புகார் கொடுத்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டியதாக பார் நாகராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாகராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கி தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுங்கட்சி போராடுவதாக தெரிவித்திருந்தார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada