Contact Us About Us
  • இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
  • இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பத்தாவது முறையாக காவல் நீடிப்பு உறவினர்கள்,நண்பர்கள் உண்ணாவிரத போராட்டம்
  • 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
  • கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம்
  • இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!
  • தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்
  • நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
  • பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்
  • திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற +2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.56% பெற்றுள்ளது
Flash News

கூட்டு பாலியல் துஷ்பிரயோக விவகாரம் – 4 வருடங்களின் பின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரியானா மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கூட்டு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட எழுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகளான சவுதாரி, சுரேந்தர் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இங்கு கருத்துரைத்த நீதிபதி, இந்த வழக்கில் பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றம், காயங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விதம் என்பன மன ரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தனர்.

இதனை கருத்திற்கொண்டு குற்றவாளிகளுக்கு ரோத்தக் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்வதாக குறிப்பிட்டனர்.

அத்துடன், அபராத தொகையை 50 ஆயிரத்தில் இருந்து 50 இலட்சமாக உயர்த்துவதுடன், குறித்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு வழங்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்து அபராத தொகையை செலுத்த வேண்டுமென ரோத்தக் துணை ஆணையாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada