Contact Us About Us
  • இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
  • இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பத்தாவது முறையாக காவல் நீடிப்பு உறவினர்கள்,நண்பர்கள் உண்ணாவிரத போராட்டம்
  • 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
  • கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம்
  • இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!
  • தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்
  • நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
  • பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்
  • திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற +2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.56% பெற்றுள்ளது
Flash News

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!

ஐரோப்பாவில் நடத்தப்படும் உலகக்கிண்ண தொடருக்கான நிகரான, ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

இதற்கமைய, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர், 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

வலுவான மற்றும் பிரபல கால்பந்து அணிகளை கொண்ட பெரும்பாலான அணிகள், ஐரோப்பியாவிலேயே உள்ளதால் இத்தொடர், மிகவும் சிறப்பு வாய்ந்த தொடராக பார்க்கப்படுகின்றது.

இந்த தொடரில், வீரர்கள் கிண்ணத்தை கையில் ஏந்துவது எவ்வளவு கௌரவம் என எண்ணுகிறார்களோ, அதே அளவு அந்த வெற்றியை கொண்டாட இரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இத்தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் முதற் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆகையால் ஐரோப்பிய கால்பந்து அணிகள் இத்தொடரில் விளையாடுவதற்காக தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர்.

55 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தமாக 10 குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, குழு ‘ஐ’ யில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் அணி, ரஷ்யா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டியானது ஹெய்ஸெல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இப்போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இரு அணிகளும் ஐந்து போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மூன்று முறை பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதில் பெல்ஜியம் அணியை பொறுத்தவரை, அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அதற்கு சிறிதேனும் ஈடுகொடுக்கும் வகையில் ரஷ்ய அணியிலும் சில இளம் வீரர்கள் உள்ளனர்.

ஆனால் கடந்த கால பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, ரஷ்ய அணியை விட பெல்ஜியம் அணியே சிறந்த அணியாக உள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா, லீக் சுற்றில் 3 போட்டிகளில் 2 வெற்றியும் ஒரு தோல்வியையும் சந்தித்தது.

சவுதி அரேபியாவுடனான முதலாவது போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கிலும், எகிப்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆனால் உருகுவேயிடம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து.

ஆனால், இதனைத் தொடர்ந்து நொக் அவுட் சுற்றில் முன்னாள் சம்பியன் அணியான ஸ்பெயினை 4-3 என்ற பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்து முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.

எனினும், காலிறுதி போட்டியில் குரேஷியா அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த ரஷ்யா அணி, போட்டியை பெனால்டி ஷூட் அவுட் வரை நகர்த்தி சென்று 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அதேபோல மறுபுறம் பலம் பொருந்திய வீரர்களை கொண்டிருந்த பெல்ஜியம் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, உலகக்கிண்ண தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

இரு அணிகளுமே தற்போது வெற்றிக்காக கடுமையாக போராடும் குணமுடைய அணிகள் என்பதால் இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிறுக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இப்போட்டியின் வெற்றியை மதிப்பீடுவதும் கடினம். ஆகையால் இப்போட்டியின் வெற்றி யாருக்கு என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada