Contact Us About Us
  • கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள விநாயகா் கோவில் வருடாந்திரவிழா
  • இந்தியாவின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்றால் உடனடியாக தேசிய நீர் வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீர் வழி திட்ட இயக்குனர் Ac காமராஜ் பேட்டி
  • நிரவ் மோடியின் சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்!
  • பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்
  • இந்தியா- நேபாளம் இடையே குழாய் ஊடாக பெற்றோலியத்தை கொண்டுச் செல்ல நடவடிக்கை
  • மதுரையில் முன்னாள் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையதேவரின் 40வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கட்சிகள்பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியல் வெளியானது!
  • சாணார்பட்டி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
  • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துக்கு பிரதமர் நேரில் வாழ்த்து
  • மதுரை அரசு மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் பணியை புறக்கணித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Flash News

இலங்கை குண்டுவெடிப்பு- பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

இதுபற்றி இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

வங்காளதேசம்- 1
சீனா-2
இந்தியா - 11
டென்மார்க் - 3
ஜப்பான் -1
நெதர்லாந்து- 1
போர்ச்சுகல்- 1
சவுதி அரேபியா - 2
ஸ்பெயின் -1
துருக்கி -2
இங்கிலாந்து- 6
அமெரிக்கா -1

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுவரை 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை. 12 வெளிநாட்டினர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada