Contact Us About Us
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
  • கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் 48 லட்ச ரூபாய் தங்க பிஸ்கட்
  • மதுரை அருகே இரதரப்பு மோதலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிப் படுகொலை தடுக்க முயன்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
  • மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல்
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
Flash News

வெற்றி தோல்வி குறித்து பங்களாதேஷ்- தென்னாபிரிக்கா அணித்தலைவர்கள் கருத்து!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி குறித்து, இரு அணிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று, கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் பின் கருத்து தெரிவித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரபீ மோர்டாசா, நாயண சுழற்சியை இழந்தது ஒருவகையில் அதிர்ஷ்டம் என கூறினார்.

இதனைதொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ‘நாணய சுழற்சியில் தோல்வியைத் தழுவியதால் தான் முதலில் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்பட்டது. எனினும், போட்டி ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன் நாணய சுழற்சியில் வென்றால் துடுப்பெடுத்தாடுவதா அல்லது பந்துவீசுவதா என நிறைய யோசித்தோம். எனினும், இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தோம்.

எனவே முதலில் துடுப்பெடுத்தாடுவது தவறாக இருக்காது என நினைத்தோம். உண்மையில் முஸ்பிகுர் ரஹீமும், இதுபோன்ற இன்னிங்சுகளில் சிறப்பாக விளையாடுவார். அத்துடன் சகீப் அல் ஹசனும் நன்றாக விளையாடினார். அதேபோல சௌம்யா சர்காரின் ஆரம்பமும், மொஹ்மதுல்லாஹ் மற்றும் மொசாடிக் ஹொசைன் ஆகியோர் இறுதி ஓவர்களில் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டத்தால் நல்லதொரு ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடிந்தது. எனவே நாயண சுழற்சியை இழந்தது ஒருவகையில் அதிர்ஷ்டம் என கருதுகிறேன்.

இதேநேரம், நாங்கள் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தோம், எமது பந்து வீச்சாளர்களை மாற்றி விக்கெட்டுக்களை எவ்வாறு கைப்பற்ற வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்தோம். எனவே அதை நாங்கள் சிறப்பாக செய்தோம் என நம்புகிறேன். அத்துடன் சுழல் பந்துவீச்சாளர்களும் தமது கடமையை சிறப்பாகச் செய்தனர்’ என கூறினார்.
………..

இதனையடுத்து, தனது தோல்வி குறித்து கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டு பிளெஸிஸ், இப்போட்டியில் முழுமையான திறமையை வெளிப்படுத்தாத வீரர்களுக்கு மன்னிப்பே கிடையாது என கூறினார்.

இதனைதொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ‘இப்போட்டியில் எமது திட்டங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறவில்லை. போட்டியின் ஆரம்பத்திலேயே லுங்கி இங்கிடி உபாதைக்குள்ளாகியது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. 330 ஓட்டங்கள் என்பது கடினமாக இலக்காக இருக்கும் என நான் கருதவில்லை. ஆனால், எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தவறிவிட்டனர்.

அதேபோல, இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஸ்விங் மற்றும் பௌண்சர் பந்துகளை வீசமுடியும் என்று நினைத்து தான் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடாமல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தோம். அதுமாத்திரமின்றி, நாங்கள் இங்கிலாந்துடனான போட்டியைப் போல இந்தப் போட்டியிலும் வேகப் பந்துவீச்சை நம்பி தான் களமிறங்கியிருந்தோம்.

அதேபோல, போட்டி ஆரம்பமாவதற்கு முன் நாங்கள் நிறைய விடயங்கள் பற்றி பேசியிருந்தோம். அதிலும் நாணய சுழற்சியில் வென்றால் என்ன செய்ய வேண்டும் எனவும், நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டுமா எனவும் கலந்துரையாடினோம். ஆனால், இன்றைய போட்டியில் லுங்கி எங்கிடியின் உபாதையுடன் எமது அனைத்து திட்டங்களுடன் நிறைவேறாமல் போனது.

இந்தப் போட்டியில் ஒருசில துறைகளில் நாங்கள் நன்றாக செய்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்தளவு முடிவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. நான் ஏற்கனவே கூறியது போல இந்த உலகக் கிண்ணத்தில் எந்தவொரு அணியும், மற்றைய அணியை வீழ்த்தும். பங்களாதேஷ் அணி மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தது. அவர்கள் இன்னிங்ஸை ஆரம்பித்த விதமும், போட்டியை இறுதி வரை கொண்டு சென்ற விதமும் பாராட்டத்தக்கது. இதனால் தான் 300 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை அந்த அணி குவித்தது.

எமது உடைமாற்றும் அறையில் உள்ள எந்தவொரு வீரரும் முழு கவனத்துடன் விளையாடவில்லை. அதன் காரணமாகவே எம்மால் முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. எந்தவொரு வீரரும் தமது உயர்ந்தபட்ச திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தமது முகங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்போதுதான் என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அதேபோல, எந்தவொரு வீரரும் தமது திறமையை வெளிப்படுத்தாவிட்டால் உண்மையில் கடுமையான தொணியில் பேசப்படுவார்கள். இவ்வாறு நிறைய சம்பவங்கள் உடைமாற்றும் அறையில் இடம்பெற்றுள்ளன. இதுதான் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டிய தருணம். இங்கிலாந்து அணியுடனான போட்டியிலும் இவ்வாறு தான் நடைபெற்றது. அதேபோல இன்றைய போட்டியிலும் எமது வீரர்கள் தமது முழுமையான ஆட்டத் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதற்கு மன்னிப்பு கிடையாது என கூறினார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada