Contact Us About Us
  • முதலமைச்சர் முன்னிலையில் ரூ.7,175 கோடி மதிப்பீட்டில் 15 ஒப்பந்தங்கள்
  • இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
  • அர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யனை இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
  • தனது சம்பளம் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு - பான்; ஆதார் எண்: சேர்ப்பு
  • அயோத்தி வழக்கு வாதங்களை அக்டோபர் 18-க்கு பிறகு ஒருநாள் கூட நீட்டிக்கப்பட மாட்டாது - சுப்ரீம் கோர்ட்டு
  • தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • பாகிஸ்தானுடன் பேசுவதில் எந்த பிரச்சினையும் இல்லை-இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
  • சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது -மத்திய அரசு அறிமுகம்
  • காஷ்மீர் விவகாரத்தில் பாக்., பிரதமர் இம்ரான் கான், மீண்டும் இந்திய அரசு மீது குற்றம்
Flash News

இலங்கை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் கைது!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல்களுடன் கோவையை சேர்ந்த அசாருர்தீன் என்பவருக்கு தொடர்பிருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பை போன்று கலிஃபா சி.எப்.எக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தை அவர் நடத்தி வந்துள்ளதாகவும், அதன்மூலம் ஐ.எஸ் அமைப்பினரின் கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாகவும், தேசிய புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹரான் ஹாசிமுடன், அசாருதீன் முகநூலில் தொடர்பில் இருந்ததாகவும், தீவிரவாத கருத்துக்களை பரஸ்பரம் பரப்பிக்கொண்டதாகவும் குறித்த அமைப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோவையை சேர்ந்த சிலருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவை, உக்கடம் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.

குறித்த பிரிவினர் முதற்கட்டமாக முகமது அசாருர்தீன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், இதனையடுத்து அபுபக்கர் சித்திக், இதயத்துல்லா, சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட அறுவரின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கோவையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த அறுவர் மீதும் கேரள மாநிலம் கொச்சியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada