Contact Us About Us
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
  • கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் 48 லட்ச ரூபாய் தங்க பிஸ்கட்
  • மதுரை அருகே இரதரப்பு மோதலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிப் படுகொலை தடுக்க முயன்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
  • மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல்
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
Flash News

திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவகர் குழுவை ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு.

ஏழுமலையான் கோவில் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க விரைவில் நடவடிக்கை.

ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் பேட்டி.

ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அமைச்சர் ஸ்ரீ நிவாஸ் பேட்டி அளித்தார்.அப்போது,கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு தேர்தல் முடிவுகளுக்கு பின் பதவி விலகி இருக்க வேண்டும்.ஆனால் அறங்காவலர் குழுவினர் பதவி விலக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அறங்காவலர் குழுவை ரத்து செய்து விரைவில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானின் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பக்தர்களுக்கு ஏழுமலையான் திருவாபரணங்கள் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியில் இருக்கும் பரம்பரை அர்ச்சகர்கள் தொடர்பான பிரச்சனைகள் ஆந்திரா முழுவதும் உள்ளன. பரம்பரை அர்ச்சகர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்.தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1300 கிலோ தங்கத்தை சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டுவந்ததில் குழறுபடிகள் செய்யப்பட்டதாக  குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகள் மீது விசாரனை நடத்தி அவற்றில் உண்மை இருப்பதாக தெரிய வந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada