Contact Us About Us
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
  • கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் 48 லட்ச ரூபாய் தங்க பிஸ்கட்
  • மதுரை அருகே இரதரப்பு மோதலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிப் படுகொலை தடுக்க முயன்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
  • மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல்
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
Flash News

திருப்பதி சிறுத்தை புலி தாக்கிய சம்பவத்தில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது

திருப்பதி:திருப்பதி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த திருப்பதி மலையை சேர்ந்த பாவனி,யாமினி ஆகியோர் மீது சிறுத்தை புலி தாக்கிய சம்பவத்தில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர் இரண்டாவது லைனில் வசிக்கும் பாவனி, யாமினி ஆகிய இரண்டு பெண்கள் தங்கள் உறவினருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று இரவு திருப்பதியில் இருந்து திருமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பதி மலையை அடைய சுமார் இரண்டு கிலோமீட்டர் இருந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை புலி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து அதிலிருந்த அவர்களை தாக்க முயன்றது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சுதாரித்து வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுவிட்டார். சம்பவத்தில் பாவனி, யாமினி ஆகியோரின் கால்களில் சிறுத்தை புலி நகம் பட்டு கீறல் காயங்கள் ஏற்பட்டன. மோட்டார் சைக்கிளில் சென்றபோது தப்பி சென்ற விட்ட நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார்கள் மீதும் அந்த சிறுத்தை தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் கார்களில் வந்தவர்கள் கார்களை வேகமாக ஓட்டி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் திருப்பதி மலை அடைந்த யாமினி, பாவனி ஆகியோரை சிகிச்சைக்காக இங்குள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பி சென்றனர். சிறுத்தை புலிகள் கொடூர தாக்குதலில் இருந்த அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாவனி, யாமினி ஆகிய இரண்டு பேரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதி திருமலை இடையே பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்காக மலைப்பாதையில் தேவஸ்தான நிர்வாகம் விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada