Contact Us About Us
  • தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை
  • நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
  • நீட் தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
  • பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
  • மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது -நடிகை குஷ்பு டுவீட்
  • புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்
Flash News

டெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி இடம் பிடித்தார். இதே போல் ஹெட்மயர் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ரன்) கேட்ச் ஆனார். ஆனால் இந்த முறை மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் பெரிய அளவில் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. மறுமுனையில் ரஹானே (15 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ரன்), ஸ்டோனிஸ் (13 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.


20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் கடந்த ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (52 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்னில் ஏமாற்றினாலும் குயின்டான் டி காக்கும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அரைசதம் விளாசி அணியை தூக்கி நிறுத்தினர். டி காக் 53 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் சுழலில் சிக்கினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் இன்றியும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் கடைசி பகுதியில் சற்று தடுமாறிய மும்பை அணி வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராட வேண்டியதாகி விட்டது.

மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் (11 ரன்), குருணல் பாண்ட்யா (12 ரன்) அவுட் ஆகாமல் நின்றனர்.

7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டிப்பிடித்தது. டெல்லிக்கு 2-வது தோல்வியாகும்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada