Contact Us About Us
  • தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை
  • நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
  • நீட் தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
  • பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
  • மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது -நடிகை குஷ்பு டுவீட்
  • புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்
Flash News

அழகான பெண்களை முத்தமிடுவேன்; பிரசார கூட்டத்தில் டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.  4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார்.  தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவில் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.  இதனை வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லே உறுதிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து பிரசார பணிகளில் முழு வீச்சில் டிரம்ப் இறங்கியுள்ளார்.  இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டோ சான்போர்டு சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய டிரம்ப், சான்போர்டில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, இன்று முதல் 22 நாட்களில் தேர்தலை வெற்றி கொள்ள போகிறோம்.  வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறோம்.

நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன்.  பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் நடந்து செல்வேன்.  நான் அங்கு சென்று கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன்.  ஆடவரையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன் என கூறினார்.

நான் ஒன்றும் வயது முதிர்ந்தவன் கிடையாது.  நான் இளமையானவன்.  நான் நல்ல உடல் வடிவத்துடன் இருக்கிறேன் என டிரம்ப் கூறியது கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.  இந்த வாரத்தில் பென்சில்வேனியா, அயோவா, வடக்கு கரோலினா மற்றும் விஸ்கான்சின் பகுதிகளில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada