Contact Us About Us
  • சென்னையில் வெளுத்து வாங்கிய மழை - புறநகர் பகுதியிலும் கன மழை
  • இன்று கொரோனா புதிய உச்சம்: நாட்டில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
  • கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
  • அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி
  • தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
  • தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்பு; வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு - ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை- சுகாதாரத்துறை செயலர்
  • பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்
Flash News

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் - இலங்கை மந்திரி

இலங்கையில் 2019-ம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பாக 269 பேர் கொல்லப்பட்ட கொழும்பு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 9 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்ளூர் மதகுரு நௌபர் மௌல்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு அஜ்புல் அக்பார் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால் அவரை இண்டர்போல், இந்தியா உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada