Contact Us About Us
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
  • கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் 48 லட்ச ரூபாய் தங்க பிஸ்கட்
  • மதுரை அருகே இரதரப்பு மோதலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிப் படுகொலை தடுக்க முயன்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
  • மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல்
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
Flash News

பஹ்ரெயின் கிராண்ட் பிரிக்ஸ்: ஹமில்டன் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இரண்டாவது சுற்றான பஹ்ரெயின் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரும், நடப்பு சம்பியனுமாகிய லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான பஹ்ரெயின் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று பஹ்ரெயின் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.405 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 34 நிமிடங்கள் 21.295 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு, அவருக்கு வழங்கப்படும் முதலிடத்திற்கான 25 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

அவரை விட 2.980 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

6.131 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த பெர்ராரி அணியின் வீரரான சார்லஸ் லெக்லர்க், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு சுற்றிகளின் அடிப்படையில், வால்டெரி போட்டாஸ் 44 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லீவிஸ் ஹெமில்டன் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் , 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இத்தொடரின் மூன்றாவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 14ஆம் திகதி, சன்காய்  சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada