Contact Us About Us
  • கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள விநாயகா் கோவில் வருடாந்திரவிழா
  • இந்தியாவின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்றால் உடனடியாக தேசிய நீர் வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீர் வழி திட்ட இயக்குனர் Ac காமராஜ் பேட்டி
  • நிரவ் மோடியின் சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்!
  • பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்
  • இந்தியா- நேபாளம் இடையே குழாய் ஊடாக பெற்றோலியத்தை கொண்டுச் செல்ல நடவடிக்கை
  • மதுரையில் முன்னாள் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையதேவரின் 40வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கட்சிகள்பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியல் வெளியானது!
  • சாணார்பட்டி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
  • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துக்கு பிரதமர் நேரில் வாழ்த்து
  • மதுரை அரசு மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் பணியை புறக்கணித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Flash News

டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதலாவதாக ஆண்கள் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்.

இப்பட்டியலில் செர்பியாவின் முன்னணி வீரரான நேவாக் ஜோகோவிச் 11070 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஸ்பெயினின் ரபேல் நடால் 8725 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6040 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் ஒரு இடம் முன்னேறி 5590 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஒஸ்திரியாவின் டோமினிக் தியம் ஒரு இடம் சரிந்து, 4765 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி 4200 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 4115 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.

கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸ், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 3240 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ ஒரு இடம் சரிந்து 3225 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் ஒரு இடம் சறுக்கி 3085 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.
…………

அடுத்ததாக பெண்கள் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்.

இப்பட்டியலில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 6021 புள்ளிகளுடன் தொடர்ந்து, முதலிடத்தில் நீடிக்கிறார்.

ரோமேனியா வீராங்கனை சிமோனா ஹெலெப் ஒரு இடம் முன்னேறி, 5782 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா ஒரு இடம் சறுக்கி, 5645 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

நடைபெற்று முடிந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில், இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வி கண்ட வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3 இடம் முன்னேறி 5580 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.

ஜேர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் சறுக்கி, 5165 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளார்.

நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், இரண்டு இடங்கள் முன்னேறி 5050 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா இரண்டு இடங்கள் சறுக்கி 5020 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இரண்டு இடங்கள் சரிந்து, 4287 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், நடைபெற்று முடிந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லே பார்டி இரண்டு இடங்கள் முன்னேறி 4275 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பெலரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஒரு இடம் சரிந்து 3595 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada